கொரோனா சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் நன்றி ஓவியம்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் நன்றி ஓவியம்

கொரோனா  சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுமி முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா  சிகிச்சை மையத்தில் ஸ்ருதி என்ற 10 வயது சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது சிறுமி ஸ்ருதி, முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் வரைந்த ஓவியத்தை காவல் ஆணையரிடம் வழங்கினார்.