தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது...!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது...!

தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் :

இந்தியாவின் 74-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கும் அரசு அலுவலகங்கள்...! செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!!

இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர்களான இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பு பிடிக்கும் வீரர்களான இருளர் பழங்குடியின சமுகத்தை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான மற்றும் கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்களான இவர்கள், பாம்பு பிடிப்பது குறித்து உலக அளவில் பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.