மீண்டும் முளைக்கும் நெல்மணிகளால் விவசாயிகள் மிகுந்த வேதனை.. என்ன காரணம்?

மீண்டும் முளைக்கும் நெல்மணிகளால் விவசாயிகள் மிகுந்த வேதனை.. என்ன காரணம்?

கடலூரில் நெல்கொள்முதல் நிலையங்களில் ஒருவார காலமாக கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை பெய்ததால் நெல்மணிகள் மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளன.

 பலத்த மழை

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகள் அனைத்தும் அதிவேகமாக நிரம்பி வருகின்றன.

நெல்மணிகள் கொள்முதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர். தற்போது அறுவடை நடந்து வரும் நிலையில், கோமங்கலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகள் காத்து கிடக்கின்றனர்.

மீண்டும் முளைத்த நெல்மணிகள்

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எனவே, நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.