பிஎஸ்பிபி பள்ளியின் கூட்டுக்களவாணித்தனத்தில் எல்ஐசிக்கும் தொடர்பா? இணையத்தை கலக்கும் அதிர்ச்சி தகவல்!!

பிஎஸ்பிபி பள்ளியின் கூட்டுக்களவாணித்தனத்தில் எல்ஐசிக்கும் தொடர்பா? இணையத்தை கலக்கும் அதிர்ச்சி தகவல்!!

பிஎஸ்பிபி பள்ளியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு மத்திய அரசின் எல்ஐசி நிறுவனம், சட்டவிரோதமாக மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக இணையத்தில் தகவல் வைரலாகி வருகின்றன.

சென்னை கேகே நகரில் செயல்பட்டு வரும் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் தான் தற்போது தமிழகத்தின் ஹாட் நியூசாக இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள மிகச்சிறந்த பள்ளிகளில் ஒன்றாக கருதப்பட்ட இப்பள்ளியில், மாணவிகள் பலர் அங்கு பணியாற்றிய ஆசிரியராக இருந்த ராஜகோபாலன் என்பவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. 

அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் காமராஜ் நிறுவிய இப்பள்ளியை, அப்பள்ளியில் டிரஸ்டியாக இருந்த ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் அபகரித்துக்கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. இது ஒரு பக்கம் இருக்க அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளில் மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகள் அம்பலமாகி வருகின்றன.

இந்தநிலையில் பிஎஸ்பிபி பள்ளிக்கும் எல்ஐசி நிறுவனத்துக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி  பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி, கடந்த 1990களில் எல்ஐசி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.  இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், +1,+2 வகுப்புகளில் Life Insurance என்ற சிறப்பு பாடப்பிரிவு தொடங்கப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் பிளஸ் 2வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு எந்த வித நேர்முகத்தேர்வோ, வேலைவாய்ப்புக்கான பதிவு, எழுத்து தேர்வையோ நடத்தாமல் அந்நிறுவனம் நேரடி பணியில் அமர்த்தியதாக சொல்லப்படுகிறது. 

மேலும் மண்டல கமிஷன் அறிக்கையைத்தொடர்ந்து நாடு பற்றி எரிந்து கொண்டிருந்த பின்னணியில், தான் LICயும் PSBBயும் சேர்ந்து இந்த கூட்டு களவாணித்தனத்தை செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது தவறு என தீர்ப்பு வந்தபின்னரே இந்த நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

மக்களின் சொத்து, நாட்டின் கோவில் என்றெல்லாம் மேடைகளில் முழங்கும் இந்த LIC செய்த இந்த உள்ளடி வேலைகளால் கொதித்து போயுள்ளனர், இன்று வேலைக்கிடைக்காமல் திணறும் இளைஞர்கள்.!!