3 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை.. ஒத்துழைக்காத பள்ளி முதல்வர்... ஆதாரம் திரட்டும் போலீஸ்!!

3 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை.. ஒத்துழைக்காத பள்ளி முதல்வர்... ஆதாரம் திரட்டும் போலீஸ்!!

பிஎஸ்பிபி பள்ளி பற்றி தினம் ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவரும் நிலையில், மேலும் பல ஆசிரியர்கள் இதுபோல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

கேகேநகரில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில், பிரபலங்கள் பலரது குழந்தைகள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததான புகார்கள் தமிழகத்தை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அவர் மீது அடுக்கடுக்காக பல மாணவிகள் காவல்துறைக்கு புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

இந்த ஆசிரியர் மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாத நேரிலும், வாட்ஸ்அப் வாயிலாகவும்  தகாத பேச்சுக்களை மாணவிகளிடம் பேசி வந்துள்ளார். போதாததற்கு மாணவிகளின் உடை அலங்காரத்தையும் வர்ணித்து அவ்வப்போது மெசேஜும் அனுப்பியுள்ளார். தற்போது கைதான அவரிடம் இருந்து அவரது லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்த பல விஐபிக்களின் மகள்களின் அந்தரங்க புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர். 

இந்தநிலையில் 2வது நாளாக விசாரணைக்கு ஆஜாரான அப்பள்ளியின் முதல்வர் கீதாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் சில கேள்விகளுக்கு அவர் பதில் கூறாமல் மவுனம் காத்துள்ளார்.

குறிப்பாக ராஜகோபாலன் மீது மாணவிகள் கடந்த 5 ஆண்டுகளாக புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி கேட்டதற்கு அவர் பதில் அளிக்கவில்லையாம். அதுமட்டுமல்லாது, ராஜகோபாலனை போல் வேறு ஆசிரியர்கள் உள்ளார்களை அவர்களின் விவரங்களை கூறும்படி கூறியுள்ளனர். ஏனெனில் ராஜகோபாலனிடம் நடத்திய விசாரணையில் அவர் அப்பள்ளியில் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் இதுபோல் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறியுள்ளார். ராஜகோபாலன் மீது மாணவிகள் புகார் தெரிவித்தும், அவரை ஏன் பணியிலிருந்து நீக்காமல் பாடம் நடத்த அனுமதித்தீர்கள் என்று வினவியுள்ளனர். இதற்கும் கீதா மவுனமாகவே இருந்துள்ளார். 

இருப்பினும் மாணவிகளிடம் இருந்து காவல்துறைக்கு தொடர் புகார் வந்த வண்ணம் இருப்பதால், அவர்களிடம் இருந்து ஆதாரம் திரட்ட போலீஸ் முயற்சிக்கிறதாம்.