கல்லூரி மாணவர்களின்  நலனை கருத்தில்  கொண்டு  விடுதிகளை அதிகரிக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்

கல்லூரி மாணவர்களின்  நலனை கருத்தில்  கொண்டு  விடுதிகளை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி  உள்ளார்.

கல்லூரி மாணவர்களின்  நலனை கருத்தில்  கொண்டு  விடுதிகளை அதிகரிக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  போதிய  விடுதிகள் இல்லாததால் கல்லூரிகளில் சேர்ந்த  மாணவர்கள் இடம் கிடைக்காமல்  தவித்து  வருவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் பல இடங்கள் காலியாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ் மாவட்ட எல்லைகள் குறித்த நிபந்தனைகளை தளர்த்தி எந்த அரசுக் கல்லூரி மாணவரும், எந்த விடுதியிலும் சேர்க்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தால் இந்த சிக்கலை 70 சதவீதம்  தீர்த்து விடலாம் என கூறியுள்ளார்.

அருகில் விடுதிகளே  இல்லாத கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை, தற்காலிக ஏற்பாடாக, தனியார் விடுதிகளில் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இத்தகைய கல்லூரிகளை கணக்கெடுத்து அவற்றுக்கு அருகில் புதிய மாணவர் விடுதிகளை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தி  உள்ளார்.