மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் ஒப்புதல்!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் ஒப்புதல்!!

வால்பாறை அடுத்த தாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் வால்பாறையில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 16 ஆம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு ஹரிஹரனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக  குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து  அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் முன்வந்துள்ளனர். மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஹரிஹரன், உயிருக்கு போராடி வரும் சிலருக்கு மறுவாழ்வு அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.