காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை ரேஷன் கடைகள் திறக்க உத்தரவு    

காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை ரேஷன் கடைகள் திறக்க உத்தரவு      
Published on
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை ரேஷன் கடைகள் திறந்து வைக்க உணவு வழங்கல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் கடந்த 11ம் தேதி நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டத்தில், தீபாவளி 2021 பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர் 2021 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் அதிகபட்சமாக முன்நகர்வு முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 

அதன் படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையிலான தினங்களில் நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் எனவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com