
அக்னிபத் திட்டத்தை திமுக நாடாளுமன்றத்தில் எதிர்க்கும் என மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறையில் கலந்துகொண்ட அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மாற்றுக்கட்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்த கவலை இல்லாததால் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை கண்டு அஞ்சப்போவதில்லை என தெரிவித்தார்.
மடியில் கணம் இல்லாதால் பயம் இல்லை எனவும் அவர் நகைப்புடன் தெரித்தார். அவரது மகன் சூர்யா சிவாவின் கைது குறித்து கேட்டதற்கு, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.