கல்லடா அணையில் தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Published on
Updated on
1 min read

இந்தியாவில் உள்ள பெரிய அணைகளில் ஒன்றான கல்லடா அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நான்கு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலம் தென்மலை பகுதியில் உள்ளது கல்லடா அணை. இந்தியாவில் உள்ள பெரிய அணைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த அணையானது, சுமார் 368 அடி உயரம் கொண்டவையாகும்.

மேலும், மிக நீளமான அணைகளில் ஒன்றாக உள்ள இந்த அணையின் நீர்மட்டமானது தற்போது தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தற்போது 30 சென்டிமீட்டர் அளவிலான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தற்போது மூன்று மதகுகளும் 30 சென்டிமீட்டர் அளவு உயர்த்தப்பட்டு தண்ணீரானது வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கல்லடா நதியில் தற்போது வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது.

இந்த கல்லடா நதியானது கேரள மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்கள் வழியாக செல்லும் நிலையில், தற்போது கல்லடா நதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரால் கல்லடா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக கல்லடா ஆற்று படுகை ஓரம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்தால் ஏதேனும் சேதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதையும் படிக்க: “மத்திய பாஜக அரசை கண்டித்து அக்.8-ல் நாதக. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com