6-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ?  

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது.

6-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ?   

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது. துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள், அனைத்து மாவட்ட CEO-க்கள், DEO-க்கள் பங்கேற்றனர்.

9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாவட்டங்களில் நிலவும் சூழல், பள்ளி மாணவர்களிடையே கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மாலை வரை நடைபெறும் கூட்டத்தின் முடிவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.