இங்கு மட்டுமே உண்மையான எம்சாண்ட் கிடைக்கும்.! தமிழக அரசு அறிவிப்பு.! 

இங்கு மட்டுமே உண்மையான எம்சாண்ட் கிடைக்கும்.! தமிழக அரசு அறிவிப்பு.! 

போலி எம்சாண்ட் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட 358 எம்சாண்ட் குவாரிகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் போலியான எம்சாண்ட் குவாரிகள் சில இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து, உண்மையான எம்சாண்ட் குவாரிகளை கண்டறியும் வகையில் மதிப்பீட்டு சான்று வழங்க பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டு அதற்காக குழு அமைக்கப்பட்டு அந்த குழு செய்யும் ஆய்வின்  அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது 

அந்த வகையில் 358 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதிலும், அதிகபட்சமாக கரூரில் மாவட்டத்தில் 30 குவாரிகள், திருப்பூரில் 22 குவாரிகள்,  காஞ்சிபுரத்தில் 14 குவாரிகள், கிருஷ்ணகிரி 15 குவாரிகள், செங்கல்பட்டு 10 குவாரிகள், நாமக்கல் மாவட்டத்தில் 18 குவாரி, கள்ளக்குறிச்சியில் 5 குவாரிகள், நெல்லை 4 குவாரிகள் என மொத்தம் 358 அங்கீரிக்கப்பட்ட குவாரிகள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.