அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பதில் கூற முடியும், புகழேந்திக்கெல்லாம் பதில் கூறத்தேவையில்லை...ஜெயக்குமார்

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என புகழேந்தி எழுப்பிய கேள்விக்கு, அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பதில் கூற முடியும், புகழேந்திக்கெல்லாம்  பதில் கூறத் தேவையில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பதில் கூற முடியும், புகழேந்திக்கெல்லாம் பதில் கூறத்தேவையில்லை...ஜெயக்குமார்

அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சென்னை ராயபுரத்தில் அக்கட்சியின் கொடியினை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஏற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறுகையில், 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என புகழேந்தி எழுப்பிய கேள்விக்கு,  அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பதில் கூற முடியும், புகழேந்திக்கெல்லாம்  பதில் கூறத் தேவையில்லை என்றார்.

தொண்டர்களின் வியர்வை, ரத்தம் உழைப்பால் உருவானது தான் அதிமுக, இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது இது ஒரு இரும்பு கோட்டை என கூறினார்.

தொடர்ந்துபேசிய அவர், சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை, மேலும் சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் கட்டாயம் நீக்கப்படுவார்கள் என்றார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் தம்பி டிடிவி தினகரனை நேரில் சந்தித்து உள்ளார். அவரை கட்சியில்இருந்து நீக்கிவீர்களா என்ற கேள்விக்கு, கட்சி தலைமை இதனை பார்க்கிறது என்றார்.