ஒரே பதிவெண்.. 2 சொகுசுப் பேருந்துகள் - வட்டார போக்குவரத்துத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே போலிப் பதிவு எண்ணுடன் இயங்கி வந்த 2  சொகுசுப் பேருந்துகளை  வட்டார போக்குவரத்துத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஒரே பதிவெண்..  2 சொகுசுப் பேருந்துகள் - வட்டார போக்குவரத்துத்துறை எடுத்த  அதிரடி நடவடிக்கை

திருச்சி, காங்கேயம், பல்லடம், கோவை  உள்ளிட்ட வழிதடங்களில்  போலிப் பதிவு எண்ணுடன் நள்ளிரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் சென்றது.

இதையடுத்து அதிகாரிகள் கோவை - கரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். இதில் புதுச்சேரி மற்றும் அருணாசல மாநிலத்தின் போலி பதிவு எண் கொண்ட இரு பேருந்துகள் பிடிபட்டது.

திருச்சியில் இருந்து கோவை சென்று அங்கிருந்து சென்னை செல்லும் புதுச்சேரி பதிவு எண்ணிலேயே  மற்றொரு பேருந்தும் இயக்கப்பட்டு வந்துள்ளது. அதேபோல் அருணாசலப் பிரதேச பதிவு எண் கொண்ட பேருந்தில் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து இரு பேருந்துகளையும் பறிமுதல் செய்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.