நேரிலும் பிரச்சனை... ஆன்லைன் பதிவிலும் பிரச்சனை... கன்னியாகுமரியில் புலம்பும் பொதுமக்கள்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆன்லைன் டோக்கன் புதிய முறை அறிவிப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

நேரிலும் பிரச்சனை... ஆன்லைன் பதிவிலும் பிரச்சனை... கன்னியாகுமரியில் புலம்பும் பொதுமக்கள்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைய தொடங்கி உள்ளது.மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி முன் வந்துள்ளனர். அதேநேரத்தில் குமரிமாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் ஒவ்வொரு மையங்களிலும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆயிரக்கணக்கில் குவிவதால் நெருக்கடி ஏற்பட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம் மற்றும் தொற்று பரவும் நிலையும் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில்  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதற்கு புதிய முறையான ஆன்-லைன் பதிவை அறிமுகப்படுத்தினார். அது இன்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் பொதுமக்கள் அதிகாலை முதலே தங்களின் செல்போனில் இணையம் வழியாக பதிவு செய்தனர். ஆனால் அதிகமானோர் பதிவு செய்ய முயற்சித்தில்  அதிகாரிகள் கணினி திறனை சரிய செய்ய தவறுவதால் குளறுபடி ஏற்படுவதாகவும் இதனால் ஆன்லைன் பதிவில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
 
பின்னர் கொரோனா மையங்களுக்கு பொதுமக்கள் நேரில் வந்து காத்திருந்தும் டோக்கன் பதிவு செய்தவர் மட்டுமே தடுப்பூசி என்று அதிகாரிகள் அறிவித்ததால் நீண்ட நேரம் காத்திருந்து பொதுமக்கள் திரும்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகளுடன் பேசி டோக்கன் பதிவு செய்யாமல் வந்தவர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை தங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் எப்படி பதிவு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதை மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு எளிய முறையில் தடுப்பூசி போடும் முறையை செயல் படுத்த  வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.