இனி கிராம ஊராட்சிகளில் எல்லாம் ஆன்லைனில் மட்டுமே...இன்று முதல் அமல்!

இனி கிராம ஊராட்சிகளில் எல்லாம் ஆன்லைனில் மட்டுமே...இன்று முதல் அமல்!

கிராம ஊராட்சிகளில் இன்று முதல் ஆன்லைன் மூலமாக வரி செலுத்தும் முறை அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தொிவித்துள்ளது. 

கிராம ஊராட்சிகளில் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் முறை தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வீடு, சொத்து, குடிநீர், தொழில் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஆன்லைனில் மட்டுமே பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : கோலாகலமாக நடைபெற்று வரும் 76-வது கேன்ஸ் திரைப்பட விழா...வண்ண உடைகளால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பிரபலங்கள்!

கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடத்திற்கான அனுமதி இன்று முதல் இணையதளம் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கிராம ஊராட்சியில் எந்தவொரு சேவைக்கும் கட்டணத்தை ரொக்கமாக கையில் வாங்க கூடாது என்றும், இணையம் மூலமே பெற வேண்டும் எனவும், இந்த இணையதளம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அறிவிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கிராம ஊராட்சிகளிலும் அரசு அலுவலகங்கள் கணினி மையமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.