தமிழ்நாட்டை மத்திய அரசுபுறக்கணிக்கிறதா..? கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டை  மத்திய அரசுபுறக்கணிக்கிறதா..? கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாஜக அரசின் மீதான நேரடி குற்றச்சாட்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

உங்களில் ஒவருன் என்ற நிகழ்ச்சி மூலம் அவ்வப்போது பொதுமக்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் காணொளி மூலம் பதிலளித்துள்ளார். அதில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்யாமல் அதை ஆதரிக்கும் வகையில் வரி விதிக்கும் இவர்களை என்ன சொல்வது என கூறியுள்ளார்..

இதையும் படிக்க : பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? பழ.நெடுமாறன் பேச்சு தேவையற்றது - சீமான்!

அடுத்ததாக மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டிற்காக அறிவித்த ஒரே திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காதது வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்றார். 

அதானி குழுமத்திற்கு எதிரான எவ்வித விசாரணையும் எடுக்கவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சகோதரர் ராகுல் காந்தி எழுப்பிய ஆணித்தரமான கேள்விகளுக்கு பிரதமர் ஒரு வார்த்தை கூட பதிலளிக்காதது அதிர்ச்சியாக இருப்பதாக கூறினார். மேலும் அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டு குழு விசாரிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.