சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டி : மாடு முட்டியதில் ஒருவர் பலி; 80 பேர் காயம் !!

சிவகங்கை அருகே கண்டிப்பட்டி பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு.

சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டி : மாடு முட்டியதில் ஒருவர் பலி; 80 பேர் காயம் !!

சிவகங்கை அருகே கண்டிப்பட்டி பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டிப்பட்டி பகுதியில்  பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயத்தில்  தை மாதம் 5ம்  நாள் விழாவாக சமத்துவ பொங்கல்  விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து மஞ்சுவிரட்டு போட்டியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 450க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், ஏராளமான மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர்.  இதில், மாடுகள் முட்டியதில் பாகநேரியை சேர்ந்த மலைச்சாமி என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் மாடுகள் முட்டியதில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், படுகாயமடைந்த 19 பேர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.