மே - 12 -ல் 234 தொகுதிகளிலும் லஞ்ச ஊழலுக்கு எதிராக ஒலி எழுப்பும் போராட்டம் - அர்ஜூன் சம்பத்

மே - 12 -ல்  234 தொகுதிகளிலும்  லஞ்ச ஊழலுக்கு எதிராக ஒலி எழுப்பும் போராட்டம்  - அர்ஜூன் சம்பத்

நடார் சலுகைகளை கிறிஸ்தவ நாடார்கள் பறித்துக்கொள்கின்றன:

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொஞ்சம் கொஞ்சமாக நாடார் சமுதாயத்தின் பெயரிலே கிறிஸ்தவர்கள் நாடார்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து மற்றும் சலுகைகளை கிறிஸ்தவ நாடார் என்ற ஜாதி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு இந்து நாடார்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக நாடார்கள் சிறுபான்மையினராக மாறி வருவதாக தெரிவித்தார். மதம் மாறி செல்பவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கூடாது இது குறித்து விரைவில் நீதிமன்றத்தை அணுக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு பரிசு என அறிவித்த அர்ஜூன் சம்பத்  மீது வழக்குப் பதிவு!

மேலும் படிக்க | ”ராஜா மந்திரியாக முடியாது” விமர்சனத்தை உடைத்தெறிந்து ”மந்திரியானார் டி.ஆர்.பி.ராஜா”

லஞ்ச ஊழலுக்கு எதிராக ஒலி எழுப்பும் போராட்டம்

மேலும் அவர் பேசுகையில் வருகின்ற 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை 234 தொகுதிகளிலும் லஞ்ச ஊழலுக்கு எதிராக ஒலி எழுப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.பிடிஆர் குரல் பதிவு குறித்து உண்மை தன்மை கண்டறிந்து அதை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர் தமிழக அரசு கொண்டு வந்த நீர் நிலைகள் இயற்கை வள அழிப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். த

ptr palanivel thiagarajan, பிடிஆர் இல்லாத குழுவா? கொந்தளிக்கும் தொழில்  முனைவோர்! - dissatisfaction has arisen over the non inclusion of tamil nadu  in the panel set up on gst waiver on covid materials -

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசமாக உள்ளது.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்றார். ஹலால் முத்திரை தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட வேண்டும் தடை செய்யப்பட வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | தொழில்துறை வரலாற்றில் மைல்கள் பதிக்கும்...வீரநடை போடும்!

ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்  - தமிழநாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது

மதுரை சித்திரை திருவிழாவில் ஒரு அமைச்சர்கள் கூட பங்கேற்கவில்லை என குற்றம்சாட்டிய அவர் விழாவில் பட்டாகத்திகளுடன் ரவுடித்தனம் செய்து வியாபாரிகளை மிரட்டுவது நடைபெற்றது என்றார். இது குறித்து எந்த கட்சியும் பேசவில்லை என தெரிவித்தார்.

பக்தியில் திளைக்கும் மதுரை சித்திரை திருவிழா... தயாராகும் தூங்கா நகரம்!

தூத்துக்குடியில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்பி ஆளுநர் என்பது பிரிட்டிஷ்காரர்களால் போடப்பட்ட எச்சம் என பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எதிர்க்கட்சியாக இருந்த போது சட்டையை கிழித்துக்கொண்டு கவர்னர் மாளிகைக்கு ஓடி மனு கொடுக்கும் போது தெரியவில்லையா என அவர் கேள்வி எழுப்பினார்.

கொரோனா காலத்தில் விவசாயிகளே நம்மை காப்பாற்றினார்கள்: கனிமொழி எம்.பி பேச்சு  | Kanimozhi mp says formers saved people from covid19

ஆளுநரை அவமதித்தால் அரசியல் சாசனத்தை போன்ற குற்றம் ஆழந்தர பேச்சாளரை விட்டு திட்டுவது இது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சாட்டர்ஜி என்றார். இவ்வாறு பேசுவோர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' கூறுவது என்ன? – Tamil  News Live | Tamil News | Online Tamil News | Tamilnadu News | தமிழ் நியூஸ்  | தமிழ் செய்திகள் – Don ...

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டு படம் திரையிட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என பயந்துள்ளனர்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு  இதுவே சாட்சி என்றார்.