அண்ணாமலை தரப்பில் விமான நிலையத்தில் கோஷமிட்டது குற்ற செயல் - ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

அண்ணாமலை தரப்பில் விமான நிலையத்தில் கோஷமிட்டது குற்ற செயல் - ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

மதுரைக்கிளையில் மனு 

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷமிட்டதாக தன் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மாணவி லூயிஸ் சோபியா தாக்கல் செய்த வழக்கு உத்தரவிற்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

அதில், "கடந்த 2019ல் தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தேன். இதே விமானத்தில் அப்போதைய பாஜக தலைவர் தமிழிசையும் வந்தார். இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து கோஷமிட்டேன். 

மேலும் படிக்க | முதல்வர் யார் காலிலும் விழவில்லை யாருக்காகவும் பயந்ததில்லை: வாக்குசேகரிப்பில் இபிஎஸ் - சை தாக்கிய கனிமொழி எம்.பி

அப்போது தமிழிசை என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அவரது புகாரின்பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  எனவே, இந்த வழக்கின் கீழ் என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

மனுவின் முந்தைய விசாரணையில்

* புகார்தாரரான தமிழிசை ஆளுநராக இருப்பதால் அவர் விடுவிக்கப்பட்டு, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார்.

* பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தரப்பில், எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் (லூயிஸ் சோபியா) தரப்பில், வழக்கு பதிவு செய்தது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும் என தெரிவிக்கப்பட்டது.

பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில், விமான நிலையத்தில் கோஷமிட்டது குற்ற செயலாகும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, வழக்கினை உத்தரவிற்காக ஒத்தி வைத்தார்.