சாலையில் கொளுந்து விட்டு எரிந்த ஆம்னி பேருந்து...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

பூந்தமல்லி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பாப்பான்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்து மீது பின்னால் வந்த ஆம்னி பேருந்து மோதியது. 

இதையும் படிக்க : கல்லூரி மாணவர்களுக்குள் மோதல் - 3 பேர் படுகாயம்!

இதில் மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். 

பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.