தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் நிவாரண பொருட்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூரில் இருந்து நான்கு நாட்களில் வந்த  7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 5 பேருக்கு டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

மேலும்,  தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை என குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்,  பொது சுகாதார விதிகளின் அடிப்படையில் திரையரங்கு உட்பட அனைத்து பொது இடங்களில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என்றும், இந்த விதிகளை கடுமையாக்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.