மயானப் பாதை ஆக்கிரமிப்பு: சடலத்துடன் மறியல்!

மயானப் பாதை ஆக்கிரமிப்பு: சடலத்துடன் மறியல்!
Published on
Updated on
1 min read

சூளகிரி அருகே மாயனத்திற்கு செல்லும் வழியை தனிநபர்  ஆக்கிரமித்ததால் சாலையில் சடலத்தை  வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் கிராமத்தில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த ராமாபுரம் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சின்னதாயம்மா என்ற மூதாட்டி  இயற்கை மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய கிராமத்தின் மயான பகுதிக்கு எடுத்துச் சென்றனர். அப்போது மயான பகுதி செல்லும் சாலையை அந்த கிராமத்தில் உள்ள தனிநபர் ஒருவர் சடலத்தை இந்த சாலையில்  கொண்டு செல்லக்கூடாது  என இறந்த மூதாட்டியின் உறவினர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் மயானத்திற்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்தாக சின்னதாயம்மா உறவினர்கள் தனிநபர் மீது வாக்குவாதத்தில் ஈடுபட்டு சின்னதாயம்மாவின்  உடலை சாலையில் வைத்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உத்தனப்பள்ளி போலீசார் மற்றும் உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பின்னர் நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு தனி நபர்  மயானத்திற்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்ததை விலக்கி கொண்டார். உறவினர்கள் சின்னதாயம்மாவின் உடலை மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.

 மயானத்திற்கு செல்லும் சாலையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் சாலையில் பிணத்தை வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com