இன்று இரவு டெல்லி செல்லும் ஓ.பி.எஸ் - தலைமை தேர்தல் ஆணையரை சந்திப்பதாக தகவல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இன்று இரவு டெல்லி செல்லும் ஓ.பி.எஸ் - தலைமை தேர்தல் ஆணையரை சந்திப்பதாக தகவல்!

பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே இன்று அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. தொடர் களேபரங்களுக்கு மத்தியில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே சென்றது பேசுபொருளானது.

இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்எல்ஏ மனோஜ் பாண்டியனுடன் ஓபிஎஸ் இன்று இரவு டெல்லி செல்வதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையரை ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாகவும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.