அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா? ஓ.பி.எஸ் என்ன சொல்கிறார்?

தேச நலன் மற்றும் தமிழ்நாட்டின் நலன் கருதி பாஜக உடனான கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா?  ஓ.பி.எஸ் என்ன சொல்கிறார்?

தேச நலன் மற்றும் தமிழ்நாட்டின் நலன் கருதி பாஜக உடனான கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி குறித்து பாஜகவும், அதிமுகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். முன்னதாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜகவின் கேடி ராகவன் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பாரதிய ஜனதா கட்சி மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பாக எவ்வித மாற்றுத் கருத்திற்கும் இடமில்லை என்றும்,  தமது பதிவில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.