பொதுக்குழு நிறைவடைந்த நிலையில் டெல்லி புறப்பட்ட ஓபிஎஸ்.. ஏன் தெரியுமா?

அதிமுக பொதுக்குழு நிறைவடைந்த நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓபிஎஸ் டெல்லி புறப்பட்டு சென்றார்.

பொதுக்குழு நிறைவடைந்த நிலையில் டெல்லி புறப்பட்ட ஓபிஎஸ்.. ஏன் தெரியுமா?

களேபரங்களுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு நிறைவடைந்த நிலையில், தமிழக பாஜக் தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்டோர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இவர்களது சந்திப்பு குறித்து பல்வேறு ஊகங்கள் கிளம்பிய நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்டு இருவரையும் பாஜக தலைவர்கள் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஓபிஎஸ் டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது பேசிய அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் நாளை பாஜக கூட்டணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், இதற்காக பாஜக தலைவர்கள் விடுத்த அழைப்பின் பேரிலேயே டெல்லி செல்வதாகவும் கூறினார்.

எனினும் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத் தலைவரை ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாகவும், பொதுக்குழுவில் நடைபெற்ற விவகாரங்கள் தொடர்பாக புகாரளிக்க உள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லியில் அமித் ஷா மற்றும் மோடியை சந்தித்து உள்கட்சி விவகாரம் தொடர்பாக எடுத்துரைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே இபிஎஸ் தரப்பில் மாநிலங்களைவை உறுப்பினர் தம்பி துரையும் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.