சதி வலையை பின்னியவர்களுக்கு மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்; தொண்டர்களுடன் எப்போதும் நான் இருப்பேன் - ஓ.பி.எஸ்!

சதி வலையை பின்னியவர்களுக்கு மக்கள் விரைவில் பதில் அளிப்பார்கள் எனவும், அதிமுக தொண்டர்களுடன் எப்போதும் நான் இருப்பேன் எனவும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சதி வலையை பின்னியவர்களுக்கு மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள்; தொண்டர்களுடன் எப்போதும் நான் இருப்பேன் - ஓ.பி.எஸ்!

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக ஓ.பன்னீர் செல்வம் மதுரை விமானநிலையம் வந்தடைந்தார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

இதனிடையில், ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக தொண்டர்களுடன் எப்போதும் நான் இருப்பேன் எனவும்,  சதி வலையை பின்னியவர்களுக்கு மக்கள் விரைவில் தீர்ப்பு வழங்குவார்கள் என்றார். மேலும் ஓ.பன்னீர் செல்வத்தை பெற்றது பாக்கியம் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியது ஒன்றே போதும் எனவும் அவர் பெருமிதமாக கூறினார்.