
முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லம் உட்பட 60 இடங்களில் நேற்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனை மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது. இதனையடுத்து நேற்று இரவு சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த எஸ்.பி. வேலுமணி இரண்டு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இல்லத்திற்கு சென்ற எஸ்.பி.வேலுமணி அவருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தது விரிவாக ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது ஆர்.பி. உதயகுமார், தங்கமணி, சி.விஜயபாஸ்கர், காமராஜ், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு சென்றனர்.