ஓபிஎஸ் ப்ரசண்ட் - ஈபிஎஸ் ஆப்சண்ட்... ரிப்பீட்டு...தொண்டர்கள் அப்செட்..!

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கருத்து வேறுபாடுகளை களைந்து முதலமைச்சர் பங்கேற்பு..!

ஓபிஎஸ் ப்ரசண்ட் - ஈபிஎஸ் ஆப்சண்ட்... ரிப்பீட்டு...தொண்டர்கள் அப்செட்..!

75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, திறந்த ஜீப்பில் சென்று காவலதுறை அலங்கார அணிவகுப்பை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து மாநில அரசின் நல் ஆளுமை விருதுகளை வழங்கி பின்னர், காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தேநீர் விருந்து: ஒவ்வொரு முறையும் சுதந்திர தினம் முடிந்த பிறகு, அம்மாநிலத்தின் ஆளுநர் தனது மாளிகையில் அரசியல் தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தேநீர் விருந்து அளிப்பார். அந்த வகையில் இந்தாண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து வைத்தார். 

முதலமைச்சர் பங்கேற்பு: இந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். ஏற்கனவே ஆளுநருக்கும், முதலமைச்சரும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், முதலமைச்சர் இந்த விருந்தில் கல்ந்து கொள்வாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில், அதனை தவிடுபொடியாக்கும் விதத்தில் முதலமைச்சர் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டிருந்தார். ஆயினும் திமுகவின் கூட்டணி கட்சிகள் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஓபிஎஸ் ப்ரசண்ட் ஈபிஎஸ் ஆப்சண்ட்: அனைத்து கட்சியின் தலைவர்களுக்கும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஈபிஎஸ் இந்த விருந்தை புறக்கணித்திருந்தார். ஆனால் ஓபிஎஸ் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். 

ஏன் ஈபிஎஸ் கலந்து கொள்ளவில்லை: ஓபிஎஸ் இந்த விருந்தில் கலந்து கொள்ள இருப்பது தெரிந்து ஈபிஎஸ் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவிலையா? பாஜகவினர் ஒற்றை தலைமை விவகாரத்தில் தங்களது ஆதரவை அவருக்கு தரவில்லை என்பதற்காக கலந்து கொள்ளவில்லையா? என பலரும் பலவாறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். 

ரிப்பீட்டு: இதற்கு முன்னதாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நிகழ்ச்சியின் போது கூட ஓபிஎஸ் மற்றும் தனபால் ஆகியோர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். அப்போதும் ஈபிஎஸ் கலந்து கொள்ளவில்லை. அதேபோன்று இன்றும் ஆளுநரின் தேநீர் விருந்தில் ஈபிஎஸ் கலந்து கொள்ளாதது வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு தீனி போட்டதாய் போய்விட்டதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.