சசிகலாவுடன் ஓபிஎஸ் சகோதரர் திடீர் சந்திப்பு.!!

ஆன்மீக சுற்றுப்பயணமாக திருச்செந்தூர் வந்து  தனியார் விடுதியில் தங்கியிருந்த சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் தம்பி  ராஜா திடீரென சந்தித்தார்.

சசிகலாவுடன்  ஓபிஎஸ் சகோதரர் திடீர் சந்திப்பு.!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்தது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சசிகலா இரண்டு நாட்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுப்பயணமாக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அதிமுக கட்சி கொடி கட்டிய கார் மூலம் திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார்.

இதனையடுத்து கார் மூலம் திருச்செந்தூர் வந்த அவர், அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இந்தநிலையில் அவரை ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா திடீரென சந்தித்து பேசினார். இந்தசந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.