ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்.!!

ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்.!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா   ஆன்மிக சுற்றுப்பயணமாக திருச்செர்ந்தூர் சென்றிருந்தநிலையில், அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். 

அப்போது அதே விடுதிக்கு வந்த ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சசிகலாவை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வத்தின் உடன் பிறந்த சகோதரரான ஓ. ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.