செவிலியர் பயிற்சி கல்லூரி.. வரும் நிதியாண்டில் தொடங்க நடவடிக்கை.. எங்கு தெரியுமா? - சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சு தகவல்!!

கோவில்பட்டியில் செவிலியர் பயிற்சிப் கல்லூரி தொடங்க வரும் நிதியாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செவிலியர் பயிற்சி கல்லூரி.. வரும் நிதியாண்டில் தொடங்க நடவடிக்கை.. எங்கு தெரியுமா? - சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சு தகவல்!!

சட்டப்பேரவையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

கோவில்பட்டிக்கு அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் விருதுநகரில் அரசு செவிலியர்கள் பயிற்சி பள்ளியும், 70 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கக் கூடிய தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரியும் அமைந்துள்ளதாகவும், கோவில்பட்டி செவிலியர் கல்லூரி அமைக்க 2020 ஆம் ஆண்டு நிலமாற்றம் பணிகள் தொடங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி நடைபெறாமல் இருந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், மாவட்டம் தோறும் செவிலியர் பயிற்சி பள்ளி அல்லது கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு தமிழக அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், கோவில்பட்டியில் செவிலியர் கல்லூரி அமைக்க வரும் நிதியாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

அதேபோல், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் செலவில் தாய் சேய் நல கட்டிடம் மற்றும் 40 லட்சம் ரூபாய் செலவில் விஷ பூச்சி கடித்தால் சிகிச்சை வழங்கும் கட்டடம் கட்டும் பணி முடிவு பெற்றுள்ளதாகவும்,10 நாட்களுக்குள் தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்துவைப்பார் எனவும் தெரிவித்தார்.