அரசு நிர்ணயித்த அளவுகளில் அல்லாமல் நம்பர் பிளேட்... 1,892 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு...

அரசு நிர்ணயித்த அளவுகளில் அல்லாமல் நம்பர் பிளேட் பொருத்திய  1,892 வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

அரசு நிர்ணயித்த அளவுகளில் அல்லாமல் நம்பர் பிளேட்... 1,892 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு...

மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி,  வாகன பதிவெண்களில் உள்ள  எழுத்துகள், எண்களின் நிறம், அளவு  குறிப்பிட்ட  இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனவும்,  சின்னங்கள், வாசகங்கள் அல்லது படங்களை ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக அரசு நிர்ணயித்துள்ள விதிகளை மீறி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி, முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக சென்னை காவல்துறைக்கு புகார்கள் வந்தன.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய போக்குவரத்து துறையினர் நேற்று அரசு நிர்ணயித்த அளவுகளில்லாமல் நம்பர் பிளேட் பொருத்தியதாக 1,892 வாகன ஓட்டிகள் மீது வழக்குபதிவு செய்தனர். அதுமட்டுமல்லாது சட்டவிரோதமாக வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி, பயணித்ததாக, வண்ணாரப்பேட்டை மற்றும் ஈசிஆர் பகுதிகளில் தலா ஒரு காரை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.