1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்...எங்கே தெரியுமா?

1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்...எங்கே தெரியுமா?

தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும் வகையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் :

தென் கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளதைக் குறிக்கும் வகையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 30 நிமிடங்கள்...தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்...!

தொடர்ந்து, புயல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீண்டும் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.