இனி இணைய வழியில் மட்டுமே கட்டணம்  - மின்சார வாரியம் !!

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், வங்கி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

இனி இணைய வழியில் மட்டுமே கட்டணம்  - மின்சார வாரியம் !!

தாழ்வழுத்த மின்இணைப்பு கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் இணையவழியில் மட்டுமே பணத்தை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. 

முன்னதாக தவறான தகவல்களால் தாழ்வழுத்த மின் இணைப்புக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்போது, பதிவுக் கட்டணம் தவிர்த்து இதர தொகை நுகர்வோருக்கு திருப்பி செலுத்தப்படும்.  இனி கட்டணம் இணையவழியில் மட்டுமே திருப்பி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், வங்கி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 3 வே நாட்களுக்குள் இணைய வழியில் பணம் திருப்பிச் செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதிய இணைப்பு, கூடுதல் மின் பளு உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் இணைவழியில் மட்டுமே கட்டணம் செலுத்தப்படுவது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.