சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் - ராமதாஸ்

தமிழ்நாட்டில் சமூக நீதியின் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு  தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிக்க : ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை...!

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் 15-ம் நினைவு நாளான வரும் 27-ஆம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை எனில், தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு பெருந்துரோகம் இழைத்தவர்களை விபி.சிங்கின் ஆன்மா மன்னிக்காது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.