காலணி தயாரிப்பு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

காலணி தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

காலணி தயாரிப்பு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

காலணி தயாரிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ், ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகை நகராட்சிகள், மாநகராட்சிகளில் பணிபுரிவோருக்கு தனியாகவும், இதர பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணிபுரிவோருக்கு தனியாகவும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி, காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு மாநகராட்சியில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.4933 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேப்போல் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்சமாக ரூ. 4843 நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்தபட்ட ஊதியம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும்,ஏதேனும் இடத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை விட, அதிகமான தொகை தற்போது வழங்கப்பட்டு வந்தால், அதையே தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு, ஆண்கள் மற்றும் பெண்கள் சமமான வேலை பார்ப்பதால் அவர்களுக்கான ஊதியத்தை சமமாக வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.