15 நாட்களுக்கு மேலாகியும் வடியாத வெள்ளம்... மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்...

நாகர்கோவிலில் மழை குறைந்து 15 நாட்களுக்கு மேலாகியும் குடியிருப்பு பகுதியை விட்டு தண்ணீர் வடியாததால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

15 நாட்களுக்கு மேலாகியும் வடியாத வெள்ளம்... மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்...

கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் பெய்த தொடர் மழையால், கன்னியாகுமரி மாவட்டம் ஏற்கனவே வெள்ளக்காடாக மாறியிருந்தது. அந்நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையின் போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மழை குறைந்து 15 நாட்களுக்கு மேலாகியும், அப்பகுதியில் குடியிருப்பு பகுதியை விட்டு தண்ணீர் வெளியேற வழியில்லை. இதனால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள், வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தேங்கிய தண்ணீரில் உலா வந்த பாம்பு-பூரான் போன்ற விஷ ஜந்துக்கள், வீடுகளுக்குள் புகுந்துள்ளன.

மேலும் அப்பகுதியில் தேங்கிய மழைநீர், தற்போது கழிவு நீராக மாறி உள்ளது. இதனிடையே, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆனந்தன் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அம்மன் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெள்ளநீர் வெளியேறாமல் பல நாட்களாக தேங்கி நிற்கிறது. இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.