உதிரும் கட்டிடங்களால் குடியிருப்புவாசிகள் அச்சம்... தரமில்லா குடிசைமாற்று வாரிய வீடுகள்...

சென்னை புளியந்தோப்பு அடுத்து பெரம்பலூரிலும்  வீடில்லா ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட குடிசைமாற்று வாரிய வீடுகள் தரமற்றதாக எழுந்திருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதிரும் கட்டிடங்களால் குடியிருப்புவாசிகள் அச்சம்... தரமில்லா குடிசைமாற்று வாரிய வீடுகள்...

பெரம்பலூர் கவள் பாளையம் கிராமத்தில் கடந்த அதிமுக அரசால் 42 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு குடிசைபகுதி மாற்றுவாரியம் சார்பில் சார்பில் மொத்தம் 504 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடில்லா ஏழைகளுக்கு வழங்குவதற்காக கட்டப்பட்ட இந்த வீடுகளுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பயனாளிகள் ஒவ்வொருவரிடமும்  தலா 1 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு வீடுகளை ஒதுக்கியுள்ளனர்.

இது வரை 150 குடும்பங்கள் இந்த வீடுகளில் குடியேறியுள்ளனர். அடுத்தடுத்த மாதங்களில் மற்ற வீடுகளிலும் பயனாளிகள் குடியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த நிலையில் இந்த வீடுகள் குடும்பங்கள் வசிப்பதற்கு தரமில்லாமல் பெருமளவில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் பெற்றுக் கொண்டு தரமற்ற வீடுகளை கட்டப்பட்டுள்ளதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.  சுவரின் பூச்சுகள் கையை வைத்தாலே கையோடு வந்துவிடுவதாகவும், தேய்த்தால் சிமெண்ட் பூச்சுகள்  உதிர்வதாகவும் புகார் எழுந்துள்ளன.  

இதைத்தொடர்ந்து திருச்சிகோட்ட குடிசைமாற்று வாரிய நிர்வாக பொறியாளர் வசந்தகுமார், மேற்பார்வை பொறியாளர் அழகுபொன்னையா ஆகியோர் புகாருக்குள்ளான குடியிருப்பை ஆய்வு செய்தனர். பெயரளவிற்கு ஆய்வு செய்து பாதிப்பை குறிப்பெடுத்துக் கொண்ட அதிகாரிகள் பாதி வீடுகளை பார்வையிடாமலேயே திரும்பி சென்றனர். பழுதுகள் அனைத்தும் சீர் செய்து தரப்படும் என தெரிவித்தார். சென்னை புளியந்தோப்பு அடுத்து பெரம்பலூரிலும்  வீடில்லா ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட குடிசைமாற்று வாரிய வீடுகள் தரமற்றதாக எழுந்திருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.