நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக ஆரம்பம்!!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக ஆரம்பம்!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 8 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சிகள் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளன. 

பொங்கல் பண்டிகையின்போது 17- ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 29- ஆம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை வேலை நாள் என்பதால் நாளையும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.