6 துறைமுகத்தில் 3-ஆம் எண் கூண்டு ஏற்றம்...!

மிக்ஜாம் புயல் உருவானதைத் தொடர்ந்து தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவடைந்தது. இது வடமேற்கு  திசையில் நகர்ந்து  பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து ஐந்தாம் தேதி நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : ராஜஸ்தான் : காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக... !

இந்நிலையில், மிக்ஜாம் புயல் உருவானதை தெரிவிக்கும் வகையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. அதன்படி சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

புதுச்சேரி கடல் பகுதி சீற்றமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். புயல் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்க 46 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர். 211 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.