15 மாதங்களில் 169 டன் போதை பொருட்கள் பறிமுதல்; "நோ டூ ட்ரக்ஸ் - யெஸ் டு லைஃப்" - மினி மாரத்தானை துவக்கி வைத்து அமைச்சர் பேட்டி..!

15 மாதங்களில் 169 டன் போதை பொருட்கள் பறிமுதல்; "நோ டூ ட்ரக்ஸ் - யெஸ் டு லைஃப்" - மினி மாரத்தானை துவக்கி வைத்து அமைச்சர் பேட்டி..!
Published on
Updated on
1 min read

15 மாதங்களில் 169 டன் போதை பொருட்கள் பறிமுதல்; "நோ டூ ட்ரக்ஸ் - யெஸ் டு லைஃப்" - மினி மாரத்தானை துவக்கி வைத்து அமைச்சர் பேட்டி..!

"NO TO DRUGS, YES TO LIFE" மினி மாரத்தான்

சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய "NO TO DRUGS, YES TO LIFE" விழிப்புணர்வு  மாரத்தான் இன்று காலை நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் ப்ரியா ராஜன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து  அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துமணை வளாகத்தில் துவங்கிய மினி மாரத்தான் ஓட்டம் பல்லவன் சாலை, நேப்பியர் பாலம், ராஜாஜி சாலை போர் நினைவு சின்னம் வழியாக மீண்டும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துமணை வளாகத்திற்க்கு வந்து சேர்ந்தனர். 

இந்த மாரத்தானில் பங்கேற்ற அனைவரும் போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சாலைகளில் அணிவகுத்து சென்றனர். 1500 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்துக்க கொண்டனர்.


அமைச்சர் மா.சு செய்தியாளர் சந்திப்பு

மினி மாராத்தானை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் கடந்த 2013 முதல் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் மட்டும் 169 டன் அளவிலான போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கஞ்சா பயிரிடுதல் முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி பூஜ்ஜிய நிலையில் இருந்தாலும் அண்டை மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கஞ்சா ஊடுருவலை தடுக்க தென்னிந்திய அளவிலான காவல்துறை டிஜிபிக்கள் மாநாட்டில் பங்கேற்ற ஏடிஜிபி எடுத்த நடவடிக்கையில் ஆந்திராவில் சுமார் 4000 கோடி மதிப்பிலான 1,416 ஏக்கர் கஞ்சா தோட்டங்களை கண்டறிந்து அம்மாநில அரசு அழித்தது.


போதையில்லா தமிழ்நாடு 

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை 60 லட்சம் மாணவர்கள் ஏற்றனர்.

அதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் போதைப் பொருட்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன எனவும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com