தமிழக அரசுடன் அதுபோன்ற பேச்சுவார்த்தை நடைபெறவில்லை? - போர்டு நிறுவனம் அறிவிப்பு

தமிழக அரசுடன் அதுபோன்ற பேச்சுவார்த்தை நடைபெறவில்லை? - போர்டு நிறுவனம் அறிவிப்பு

மின்சார வாகன தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

நஷ்டத்தை எதிர்கொண்ட ஃபோர்டு நிறுவனம்,  தமிழகத்தில் அமைத்திருந்த தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்தது. இருப்பினும் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் பணியில் நிறுவனம் கவனம் செலுத்தி வரும் நிலையில்,  தமிழகத்தில்  மூடத்திட்டமிட்டுள்ள அந்த ஆலையில் மின்வாகன உற்பத்தியை தொடங்கி, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக  தமிழக அரசு அந்நிறுவனத்துடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

அதுவும் 25 ஆயிரத்து 938 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னர் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசுடன் அதுபோன்ற பேச்சுவார்த்தை  நடைபெறவில்லை என ஃபோர்ட் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.