மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலி இல்லாததால் நீண்ட நேர காத்திருப்புக்கு பின் வாக்களிப்பு!!

வாக்குச்சாவடிகளில் மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக எந்த வித முன்னேற்பாட்டு வசதிகளும் செய்யப்பட வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலி இல்லாததால் நீண்ட நேர காத்திருப்புக்கு பின் வாக்களிப்பு!!

தமிழகம் முழுவதும் இன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை காவல்துறையினருடன் இணைந்து தேர்தல் ஆணையம் செய்து வந்த நிலையில் மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க ஏதுவா வாக்குச்சாவடிகளில் சரிவர முன்னேற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதன்படி சென்னை தி நகரில் உள்ள தக்கர் பாபா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மாற்றுதிறனாளி சக்கர நாற்காலி இல்லாததால் வாக்களிக்க இயலாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்திதரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த முறையாவது மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக தகுந்த வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் தான் வாக்களிக்க உதவிய காவல்துறையினருக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.