அதிமுகவில் ஆளுமை  வாய்ந்த  தலைமை இல்லை ...திருமாவளவன்.!!

அதிமுக கூட்டணியில் ஆளுமை  வாய்ந்த  தலைமை இல்லை என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஆளுமை  வாய்ந்த  தலைமை இல்லை ...திருமாவளவன்.!!

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆவடி மாநகராட்சியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரித்தார். அப்பொழுது  பேசிய அவர் கூறுகையில், அதிமுகவில் ஆளுமை நிறைந்த தலைவர்கள் எவரும் இல்லை. அதனால் அக்கட்சி சரிவை சந்தித்து வருவதாக தெரிவித்தார்.