தமிழ்நாட்டின் மீது எதையும் யாராலும் திணிக்க முடியாது ...ராகுல்காந்தி.!!

தமிழ்நாட்டின் மீது எதையும் யாராலும் திணிக்க முடியாது எனவும், இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய முடியும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்தார்.   

தமிழ்நாட்டின் மீது எதையும் யாராலும் திணிக்க முடியாது ...ராகுல்காந்தி.!!

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்' சுயசரிதை நூலின் முதல் பாகத்தை   ராகுல்காந்தி வெளியிட்டார். இதன் பின்னர் பேசிய அவர், மிக சிறந்ததொரு நூலை  மு.க ஸ்டாலின் எழுதியுள்ளார் என்று வாழ்த்து தெரிவித்தார்.    

தமிழகத்திற்கு எப்போது வந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற அவர், நாடாளுமன்றத்தில் தாம் பேசியதை தமிழகம் கொண்டாடியது எனவும்  அதை எண்ணிப்பார்க்கையில் தனது ரத்தம் தமிழ்நாட்டில் கலந்தது போல் உணர்ந்ததாக குறிப்பிட்டார்.  

தொடர்ந்து ராகுல் காந்தி பேசிய போது, மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது எனவும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இழைக்கப்பட்டது அநீதி எனவும் குற்றம்சாட்டினார். மேலும் பாஜக கற்பனை உலகத்தில் இருக்கவேண்டாம் என எச்சரித்த ராகுல்காந்தி, இந்தியா எப்படி இருக்க வேண்டும் என மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.