மாலை 6 மணி வரை எந்தவொரு விமானமும் தரையிறங்காது: விமான நிலைய நிர்வாகம்...

சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாலை 6 மணி வரை எந்தவொரு விமானமும் தரையிறங்காது என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மாலை 6 மணி வரை எந்தவொரு விமானமும் தரையிறங்காது: விமான நிலைய நிர்வாகம்...

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக, சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சாலைகளில் தேங்கிய மழை வெள்ளத்தில் சிரமத்துடன் வாகன  ஓட்டிகள் அன்றாட பணிக்கு சென்று வருகின்றனர். விமான சேவைகளும் ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இன்று சென்னை நகரம் முழுவதும் பலத்த மழையுடன் சூறைக்காற்று வீசி வருகிறது. மோசமான வானிலை காரணமாக காலை மும்பை,டெல்லியிலிருந்து சென்னை வந்த 2  விமானங்கள் தரையிறக்க முடியாத நிலை காணப்பட்டது. இதையடுத்து அவை முறையே ஐதராபாத், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. இதற்கிடையே பலத்த காற்று வீசி வருவதால்,  மாலை 6 மணி வரை எந்தவொரு விமானங்களும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்படாது என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.