மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை ; மக்களுக்கு நல்ல செய்தி கூறிய வானிலை ஆய்வு மையம் ...

மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை ; மக்களுக்கு நல்ல செய்தி கூறிய வானிலை ஆய்வு மையம் ...

தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை மட்டுமே பெய்யும் எனவும் மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் நீண்ட நாட்களாக கனமழை விட்டு  விட்டு பெய்து வரும் நிலையில்,மக்கள் வெளியில் செல்ல முடியாமல் போக்குவரத்து சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டும் வகையில் வானிலை ஆய்வு மையம் மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என நல்ல செய்தியை தெரிவித்திருக்கிறது.இதனால் மக்கள் சிறிது பயம் இல்லாமல் வெளியில் செல்வார்கள்.

வானிலை ஆய்வு மையம் தகவல் : 

வங்கக்கடலில் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டு இருந்தது. இன்று காலை 5.30 மணி அளவில் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.நேற்று தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள  பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல்  பகுதிகளில் காரைக்காலில் இருந்து  சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில்  கிழக்கு-தென்கிழக்கேயும்,  சென்னையில் இருந்து சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில்  கிழக்கு-தென்கிழக்கேயும்  மையம் கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு  திசையில் நகர்ந்து தமிழக - புதுவை  மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த  48 மணி நேரத்தில் நகரக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.