கள்ளக்குறிச்சி மாணவி கலவர வழக்கு...தேடப்படுபவருக்கு முன்ஜாமீன்...நீதிமன்றம் அதிரடி!

கள்ளக்குறிச்சி மாணவி கலவர வழக்கு...தேடப்படுபவருக்கு முன்ஜாமீன்...நீதிமன்றம் அதிரடி!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கில் தேடப்படுபவருக்கு முன்ஜாமீன் மறுத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பலர் கைது:

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி கல்வி பயின்ற மாணவி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து ஜூலை 17 ஆம் தேதி பள்ளிக்குள் புகுந்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பின்னர் சிலர் பொருள்களை திருடி சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பலரை கைது செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க: பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பது குற்றமா... ? நீதிமன்றம் சரமாரியான கேள்வி...!

மனு தாக்கல்:

இவ்வழக்கில் தேடப்பட்டு வரும் கடலூர் மாவட்டம், வேப்பூரைச் சேர்ந்த தேவந்திரன் என்பவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உள்ளூர் கேபிள் டிவி மற்றும் பத்திரிகை நடத்துவதாகவும், இதற்காக செய்தி சேகரிக்க சென்ற தன்னையும் போலீசார் குற்றவாளியாக சேர்த்து தேடி வருகின்றனர் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

தள்ளுபடி செய்த நீதிமன்றம்:

இம்மனுவானது சென்னை உயிர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேவந்திரன் வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.