தமிழக கல்விக்கு தடையாக உள்ள - தேசியக்கல்வி கொள்கை வேண்டாம்!

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழக மக்களுக்கு தவறு இழைப்பதாகவும், எதிர்வினை ஆற்றுவதாகவும் அமைந்துவிடும் என திமுக-வின் அதிகாரப்பூர் நாளேடான முரசொலியில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக கல்விக்கு தடையாக உள்ள - தேசியக்கல்வி கொள்கை வேண்டாம்!

அதாவது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்வி தடையை ஏற்படுத்தும் ஒரு கொள்கையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனை அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு திணித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் தேசிய கல்வி கொள்கை எந்தவித சட்டப்பூர்வமான அங்கீகாரமும் இல்லாத கொள்கை அறிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் சராசரி மாணவர் சேர்க்கையை 27.1 சதவீதத்தில் இருந்து 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்தும் நோக்கில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஆனால் தமிழகத்தில் தற்போதே  சராசரி மாணவர் சேர்க்கை 51.4 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கல்வி 15 ஆண்டுகள் முன்னேறி சென்று கொண்டிருப்பதாகவும், அதற்கு தடையான தேசியக் கல்வி கொள்கை வேண்டாம் எனவும் முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.